tamilnadu

img

முதலாளிகளுக்கு 12 மணி நேரம் ‘உழைத்துக் கொட்ட’ வேண்டுமாம்... பாஜக ஆளும் ம.பி. மாநில அரசு உத்தரவு

போபால்:
கொரோனா பீதி, ஊரடங்கு ஆகியவற்றைச் சாக்காக வைத்து, முதலாளிகளுக்கு சாதகமான- அதேநேரத்தில் தொழிலாளர்கள் நூற்றாண்டு காலம் போராடிப்பெற்ற உரிமைகளை பறிக்கும் நடவடிக்கையில் பாஜக ஆட்சியாளர்கள் இறங்கியுள்ளனர்.

குறிப்பாக, தொழிலாளர்களின் வேலைநேரத்தை 12 மணிநேரமாக அதிகரிக்கும் திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. தொழிலாளர் சட்டப்படி, வேலைநேரமானது நாளொன்றுக்கு 8 மணி நேரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு கூடுதலாக பார்க்கும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சம்பளத்தை இரட்டிப்பாக கணக்கிட்டு வழங்க வேண்டும். ஆனால், கொரோனா நெருக்கடியைக் காரணமாகக் காட்டி, வேலைநேரம் ‘8 மணி’ என்பதை 12 மணி நேரமாக அதிகரிக்கவும், இந்த கூடுதல்4 மணிநேர உழைப்புக்கு இரட்டிப்புஊதியமெல்லாம் வழங்க வேண்டியதில்லை எனவும் முதலாளிகளுக்கு சாதகமாக அறிவிக்க உள்ளது. 

முன்னோட்டமாக, குஜராத் மாநிலபாஜக அரசு இதற்கான அறிவிப்பைவெளியிட்டுள்ள நிலையில், அண்மையில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, மத்தியப்பிரதேச முதல்வராகி இருக்கும் பாஜக தலைவர் சிவராஜ் சிங் சவுகானும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.“இந்த நெருக்கடியான கொரோனா காலகட்டத்தில் புதியவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.அதற்கு தொழிலாளர் சட்டங்களை மாற்ற வேண்டும். இப்போது வேலைநேரம்  மணி நேரமாக உள்ளது.இதனை நாங்கள் 10 அல்லது 12 மணி நேரமாக மாற்றத் திட்டமிட்டுள்ளோம். தொழிலாளர்களுக்கு வேலைக்கு ஏற்ற கூலி கிடைக்க வேண்டும்; ஆலைகளின் உற்பத்தியும் அதிகரிக்க வேண்டும்” என்று சவுகான் ஜம்பமாக பேசியுள்ளார்.

;